மிதாமித வார்த்தை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மிதவார்த்தைக்(கு) உள்ளறிவு மெய்ச்சுகமுங் குன்றா
ததிவார்த்தைக் கவ்வுரைகெட் டப்போ - டுதிரமிவை
சுண்டும்பொங் கும்பித்தஞ் சூழுதலால் ஐயவினை
யண்டும்பொங் கும்புனல்நோ யாய்!

- பதார்த்த குண சிந்தாமணி

அளவான வார்த்தை பேசினால் உள் அறிவும் உடல்நலனும் பெருகும்; அதிகமாகப் பேசினால் மேற் சொன்ன இரண்டும் கெடும்; அதுமட்டுமன்றி இரசதாதுவும் இரத்ததாதுவும் குறையும்; அதனால் பித்தம் அதிகமாகும்; சிலேத்துமமும் சலநோயும் தோன்றும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jan-23, 9:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே