காலையில் சிலம்பம் - மல்யுத்தம் செய்தல் - குதிரையேற்றம் - பாத நடை - இவைகள் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சிலம்பமுதல் மல்யுத்தந் தேசிநடை கொள்ளிற்
பலம்பரவு மெய்யிறுகும் பன்னத் - துலங்குபசி
யுண்டாங் கபவாத மோடுவலி சூலையும்போம்
பண்டா மலம்இறங்கும் பார்
- பதார்த்த குண சிந்தாமணி
காலையில் சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், நடை இவற்றைச் செய்வதால் பலமுண்டாகும். உடல் வன்மையுறும். பசியுண்டாகும்.