உன்னைக் காணாமல் என்பொழுது விடியுமா புன்னகையே

தென்றல் வீசாமல் பூக்கள் பூத்திடுமா தோட்டத்தில்
பொன்னிளம் கதிர்வராமல் இதழ்விரியுமா பொழிலில் தாமரை
அன்னம் நீந்தாமல் அந்தத் தாமரை அகம்மகிழுமா
உன்னைக் காணாமல் என்பொழுது விடியுமா புன்னகையே

தென்றல் தொடாமல் பூக்கள் பூத்திடுமா
பொன்னிளம் கதிர்வராமல் தாமரை மலருமா
அன்னம் நீந்தாமல் மகிழுமா
உன்னைக் காணாமல் என்பொழுது விடியுமோ ?

-------யாப்பின் இருவடிவில்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jan-23, 12:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 167

மேலே