காதல் ஏவு கணை
கலிவிருத்தம்
வேய்குழல் கன்னியை வேள்வியை வலம்வந்து
ஏய்தலில் கைத்தலம் பற்றியே முடித்தனன்
தோய்தலில் மங்கையைச் சூலுற செய்தவன்
சேய்மைகா வல்பணி செய்திட சென்றானே
சேய்மை == தொலைதூரம்
நேரிசை ஆசிரியப்பா
தலைவன் தன்மனையாள் அகலதன் நினைப்பும்
வாட்டும் காதலி பொற்சாந்து மஞ்சள்
பொங்கு காமமுடல் தையலால் பூச்சதும்
வனப்பு வாசமும் நீண்ட நேர்க்கோட்டில்
நாசித் தண்டும் நீள்வளை புருவமும்
பளிங்கது நடுவில் கண்கரு மணியும்
ஓடியாட வளர்சடை வகிடு பின்னல்
தாம்பூல சிவப்பிதழ் நீள்முத்து நிறப்பற்கள்
பிஞ்சு வெண்டை நீள்விரல் பவழத்தின்
நகங்கள் ஒயில்நடை உரசிடு புடவை
தந்திடும் ஓசையும் மின்காந்த வாளிப்பும்
நினைக்கத் தித்திக்கும் அவளின்
மெல்லிய குரலோசை யால்மனம் பறந்ததே
வண்ணத்தை உடலில் பூசியவள் தழுவி
உடனுறை யவளது வாசம் வாட்ட
இமய வெண்பனி பொழிவதின் குளிரில்
மாறிய மனதின் பாய்ச்சல் எல்லை
விட்டு ஏவுகணை எனப்பறந்து
அலைந்து எங்கெங்கும் மடந்தையைத் தேடியதே
கொடியிடை மகளவள் குமிழ்நகை ரசித்திட
படையுடை பிடியதை தளர்த்தவன் விடுத்தனன்
இடுதேள் பணியதில் விடுமுறை எடுத்தவன்
சடுதியில் கலந்தவள் மடியினில் சாய்ந்தானே
இடுதேள். =. பொய்க்காரணம்
இராணுவ வீரன் வேய்க்குழல் கன்னியை வேள்வி குண்டத்தீயை சுற்றி வந்து திருமணம் செய்து சிலநாள் இல்லறத்தில் ஈடுபட்டு சுகித்திருந்தனர். சிலநாளில் மங்கையும் சூலுற மகிழ்ச்சி கொண்டனர். கொஞ்ச நாள் கழித்து அவன் செய்யும் தொலைதூர எல்லைக்காவல் பணிக்கு திரும்ப வேண்டியபோது அடை மனதுடன் பிரிந்து சென்றான்.
இமயமுகட்டில் கும்மிருட்டில் பனிப்பொழிவில் கொல்லும் குளிரில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தும் அவன் நினைப்பு தன்னுடன் மனைவியைக் கொஞ்சிக் குலவிய்தும் பேசியதும் நெஞ்சை வாட்டியது. அவன் மனம் ஏவுக்கணைp போலத் தமிழ்நாட்டிலுள்ள அவனது கிராமத்தில் அவளது உருவத்தைத் தேடி அலைந்தது கொண்டிருந்தது.
அவனும் ஏதோ ஒரு பொய்க்காரணம் காட்டி விடுமுறை பெற்று
அவனுடைய மனைவியைப் பார்க்க பறந்து வீடு வந்து சல்லாபித்து அவள் மடியில் சாய்ந்துகிடந்தான்.