அவள்
கூவும் குயில் சோலையில் இன்று
பாவை ஒருத்தியைக் கண்டேன் அவள்
மேவியே மாமரத்தின் அடியில் சாய்ந்து
நின்று விண்ணை நோக்கி ஏதோ
பெரும் சிந்தனையில் இருந்தாள் போல
எத்தனை அழகு எத்தனை அழகு
இவள் எப்படிச் சொல்வேன் அதை
அவள் கன்னமிரண்டும் மாங் கனியே
மாமரத்தில் காய்த்த கனி எங்கே
மாமரத்தில் படர்ந்த வெற்றிலைக் கொடிபோல்
இப்பாவை இடையானதே கொடியோடு கொடியாய்
இதோ தன்னை மறந்தே பாவயவள்
பாடுகிறாள் தமிழ்ப் பாட்டு அதன்
இனிமையில் மயங்கிய சோலை குயில்
பாட மறந்து அதை ரசித்தது போலும்
தேவமாந்தரும் மயங்கும் பேரழகி பாவை
என்மனதில் புகுந்திடுவாளோ எப்போது
அந்த சிந்தனையில் ஆழ்ந்து நான் ஆங்கு