2023

புத்தாண்டே….
புது வரவே….
பன்னிரு திங்கள் சூலில்
உருவாகி பிறந்த உறவே
பன்னிரு திங்கள் திண்று
பெருத்து பருத்து
பனி தொட
பனிக்குடம் தொறந்து
பிறந்த ஆண் டே

என்னே விந்தை!!

பிறக்கும் போதே சூலியாய்
பிறப்பதென்ன நீ....

365நாள் நக்கி திண்று
366ஐ பெத்தேடுக்க
நடக்கும் ஆண் டே

நீ பிறக்கும் நேரம்
எல்லோருக்கும் எப்படி
தெரிந்திருக்கின்றது முன்னாடி...

மனித மனங்களின்
வெப்பம் தணிநிக்கவோ
நல் இரவு பனியில்
குளித்தே வருகிராய் எப்போதும்

எல்லோரை போல உன்னிடமும்
எதிர்பார்க்கிறேன் இன்பங்களை

நீயாவது
இனி நீயாவது இனி
உன்னுடன் மிஞ்சட்டும்
இன்பங்கள்

உன் பிறப்பை‌ கொண்டாடி
உன்னை வாழ்த்தும்
எல்லோருக்கும் இன்பங்களை
இனிப்பாக வழங்கிடு

நீ வர வேர்க்கிறேன்
நீவி வருடும்
குளிரிலும்

வா....
வாழ்த்துகிறேன்
வா....
வாழ்வளிக்க...
வா....

எழுதியவர் : ஆரோ (3-Jan-23, 1:46 pm)
சேர்த்தது : ஆரோ
பார்வை : 1213

மேலே