252 கைக்கூலிப் பழிசொலக் காணா வோர்வாய் - கைக்கூலி 8
கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
பசியினா லெளியனோர் பகலி ரப்பினும்
அசியுறு மெங்கணும் ஆக்க முள்ளவர்
நிசிபகல் பலரிட நிதமு மேற்கின்ற
வசையினைச் சொல்லவோர் வாயும் போதுமோ. 8
- கைக்கூலி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
பசியினால் ஏழை ஒருவன் பகல் நேரத்தில் பிச்சை எடுக்க நேரிட்டாலும், அவனை எல்லோரும் இகழ்ந்து சிரிப்பார்கள்.
செல்வமும், பதவியும் உடையவர் இரவு பகலாக எல்லாரிடமும் கைக்கூலி பெறுவதனால் தினமும் அடைகின்ற பழிச் சொற்களை சொல்ல ஒரு வாய் போதாது" என்று கைக்கூலி பெறுவதனால் ஏற்படும் இழிவை இப்பாடலாசிரியர் எடுத்துரைக்கிறார்.
அசி - இகழ்ச்சிச் சிரிப்பு. வசை - பழி.