கோட்டான் கறி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கோட்டான் கறிக்குக் கொடும்பசியாம் நோய்க(ள்)தலை
காட்டா(து) அடங்குமிது கைவல்யங் - காட்டானை
மாமதம்போற் காமமுறும் வன்மருந்தின் பத்தியமாம்
பூமயிலே யாவர்க்கும் ஓது
பதார்த்த குண சிந்தாமணி
கோட்டான் கறிக்கு மிகுந்த பசியும் சுக்கிலமும் அதிகரிக்கும்; சிற்சில நோய்கள் நீங்கும்; இது மருந்திற்குப் பத்தியமாகும்