கச்சற் கருவாட்டுக் கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாதமறும் அப்பொழுதே வன்பித்தம் உண்டாகுஞ்
சீத மகலுந் தினவும்போங் – கோதாய்கேள்!
கண்டால் பசிஎழும்புங் கச்சற் கருவாடு
கொண்டால் சுரமு(ம்)விடுங் கூறு

பதார்த்த குண சிந்தாமணி

இதன் கறியால் வாதம், கபம், நமைச்சல், சுரநோய் இவை நீங்கும்;.கபபித்தமும் தீபனமும் உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jan-23, 7:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே