பாத்திமா மலர்
பாத்திமா மலர் என்பர் 29 மே 2014 ல்கல்வி என்பவர் எழுதியதை எழுத்து
தளத்தில்சேர்த்.துள்ளார் . இந்தக்கட்டுரையில்கல்வி என்பவர் ஏதோ தானே இந்தக் கருத்தை சொல்வது போல சொல்லியுள்ளார். சில இடங்களில் தெய்வத் தமிழ் புலவர்களின் கருத்தை அவரே கண்டு பிடித்து எழுதப் பட்டது போல குறித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத் தக்கது. வள்ளுவன் சொன்ன கருத்தை அவ்வை சொன்னது கண்ணதாசன் சொன்னதை அவரே சொன்னது போல சொல்லி உண்மையை இருட்டடிப்பு செய்துள்ளார். இவர்.தமிழர்களிடம்
தமிழை கல்வி என்பவர் தமிழரிடமே விற்கஎண்ணுகிறாரா. ? அல்லது பாத்திமா அவர்களுக்கு வள்ளுவன் குறளை யும் அவ்வை பழமொழிகளும்
பரிச்சயமில்லையா ? கல்வி எனும் மேதை யார் என்றுதயவு செய்து வெளிப்படுத்துங்கள் ..
தமிழுடைய புலவர்களின் புகழை குழிதோண்டி புதைக்காதீர்கள்
கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
செல்வத்துள் சிறந்த செல்வம்
கல்விச் செல்வம்
கற்றவன் அறிவாளி
போற்றப் படவேண்டும்
கல்விக்காக ஏங்குவோர் பலர்
அவர்களுக்கு கல்வி எட்டாக் கனி ஆகிறது
கற்கும் திறன் எல்லோருக்கும் உண்டு
உணர்ந்து கொண்டவன் விழித்துக் கொள்கிறான்
சிலர் கோட்டைவிட்டு பின் ஏங்குகின்றனர்
கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரமா
வளர்ந்தால் மட்டும் போதாது
அறிவில் வளர்ச்சி அடைய வேண்டும்
மனிதன் முழு மனிதன் ஆகிட கல்வி அவசியம்
கல்விக்கு நிகரான செல்வம் ஏதுமில்லை
கற்றது கற்பது ஒருவருக்கு மட்டுமல்ல
அனைவருக்கும் பலன் தரும்
கற்றுவிட்டால் கல்வியுடன்
பண்பு ஒழுக்கம் தானே வந்து விடும்
கல்லாதவன் இருந்தும்
இல்லாதவன் போல் வாழ்கிறான்
குறையற்ற வாழ்வில்
நிறைவான செல்வம் கல்வி
கல்வி வளர வேண்டும்
இன்னும் இன்னும்
கற்றவன் வாழ வேண்டும்
இன்னும் இன்னும்
என்று ஆசைப்படுவோம்
போற்றுவோம் வாழ்த்துவோம் கல்வியை
அரசற்கு தன் தேசம் அல்லாது
சிறப்பில்லை
கற்றோருக்கு சென்ற இடமெலாம் சிறப்பு
கற்போம் கற்றுத் தருவோம்
செல்வோம் செல்வத்தை நோக்கி
வளர்ப்போம் பண்புள்ள தேசத்தை .........
இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க
வாழ்கை
எழுதியவர் : கல்வி (29-May-14, 9:17 pm)
சேர்த்தது : பாத்திமா மலர் (தேர்வு செய்தவர்கள்)