ஒவ்வோர் ஊருக்கும் உண்டங்கே மண்வாசனை - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(மா காய் காய் கனி)
ஒவ்வோர் ஊருக்கும் உண்டங்கே மண்வாசனை;
தெவ்வர் யாருளரே தேர்ந்தென்றும் வாழ்ந்தேவரின்!
ஒவ்வும் வாழ்வதனில் ஒவ்வாமை இல்லையெனிலோ
செவ்வை யாம்வாழ்வுஞ் சேர்த்திடுமே இன்பந்தனை!
- வ.க.கன்னியப்பன்
குறிப்பு:
முதல் சீர் ஒரே வகையான மாச்சீர் - நான்கடிகளிலும் தேமா
இரண்டாம் சீர், மூன்றாம் சீர் - காய்ச்சீர் - ஒரே வகையாகவும் வரலாம்; வெவ்வேறாகவும் வரலாம்.
நான்காம் சீர் - கனிச்சீர் - ஒரே வகையாகவும் வரலாம்; வெவ்வேறாகவும் வரலாம்