யார்க்கானும் அஞ்சுவார்க்கு இல்லை அரண் - பழமொழி நானூறு 254

இன்னிசை வெண்பா

வன்சார்(பு) உடையர் எனினும் வலிபெய்து
தஞ்சார்(பு) இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ
மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
அஞ்சுவார்க்(கு) இல்லை அரண். 254

- பழமொழி நானூறு

பொருளுரை:

மேகங்கள் சூழ்ந்து நிற்கும் சோலைகளை உடைய மலை நாடனே! யாவர்க்காயினும் மனம் அஞ்சுவார்க்கு அரண்களாற் பயனில்லை; ஆதலால்,.வலிமை உடையராயினாரைச் சார்பாகப் பெற்றிருப்பினும் தம்முடைய வலிமையாகிய சார்பைப் பெற்றிராதவரை வலிமை உண்டாக்குவித்து புகழிற்குக் காரணமாகிய செயல்களில் அவரை நிலைநாட்ட இயலுமோ?

கருத்து:

அரசன் எத்துணைச் சார்பு பெற்றிருப்பினும் அவன் சார்பு அவனுக்கு இன்றியமையாத தொன்றாம்.

விளக்கம்:

தேசு, காரணத்திற்கு ஆயிற்று. மனம் அஞ்சுவார்க்கு அரணாற் பயனில்லையாதல் போல, தம் வலியில்லாதார்க்குத் துணைவலியால் வெற்றி யெய்துதல் இல்லையாம்; துணை வலியாற் பயனில்லையாக முடியும்.

'யார்க்கானும் அஞ்சுவார்க்கு இல்லை அரண்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-23, 8:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே