பேர்த்துமோர் இற்கொண் டினிதிரூஉம் ஏமுறுதல் கற்கொண்டு எறியுந் தவறு - நாலடியார் 364

இன்னிசை வெண்பா

கடியெனக் கேட்டுங் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான், - பேர்த்துமோர்
இற்கொண் டினிதிரூஉம் ஏமுறுதல் என்பவே,
கற்கொண்(டு) எறியுந் தவறு 364

- பன்னெறி, நாலடியார்

பொருளுரை:

இனி மணவாழ்க்கையை முனிந்துவிடு என்று தக்கோர் அறிவுரைகள் கேட்டும் முனியானாய், தலைவெடிக்கும்படி உலகிற் சாப்பறைகள் முழங்குவது கேட்டும், அத் துறவியல்பைத் தெளியானாய்,

மீண்டும் இரண்டாம் முறையாக ஓர் இல்லக்கிழத்தியை மணம்புரிந்து கொண்டு இன்புற்றிருக்கும் மயக்கத்தை அடைதல் தன்னையே தான் கற்கொண்டெறிந்து கொள்ளும் தவறென்று சான்றோர் கூறுவர்.

கருத்து:

இரண்டாம் முறையாகவும் மனைவாழ்க்கையிற் புகாமல் மக்கள் துறவுடையராய் உலகப் பெரும் பணிகள் செய்து விளங்குதல் வேண்டும்.

விளக்கம்:

இனிது என்றது, உடல் நலங் கருத்திற்று. ஏமுறுதல் – மயக்கமுறுதல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-23, 8:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

சிறந்த கட்டுரைகள்

மேலே