190 உணவு தருவோர்க்கே உடம்பு பொருளாம் - தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல் 3
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
ஐயன தருளான் மெய்மை
..அனைதந்தை யீந்தா ரம்மெய்
உய்யவூண் யசமா னன்றான்
..உதவலா லவற்கே தம்மெய்
ஐயமில் பொருளென் றுன்னி
..யன்பொடு மேவ லாளர்
மையறு பணிகள் யாவும்
..மகிழ்வொடும் புரிவர் மாதோ. 3
- தாழ்ந்தோர் உயர்ந்தோர்க்கு அடங்கல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”கடவுள் அருளால் உடம்பை அன்னையும் தந்தையும் பெற்றனர். அந்த உடம்பு உயிர் வாழ உணவை வேலை வாங்குகின்ற முதலாளி ஊதியமாகத் தருகிறார்.
அதனால் எந்த சந்தேகமுமின்றி அவர்க்கான உடைமை தம் உடம்பு என்று கருதி, அன்போடு வேலை தருபவர்கள் தரும் வேலைகள் யாவையும் மகிழ்ச்சிடன் விரும்பிச் செய்ய வேண்டும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
.
பொருள் - உடைமை. புரிவர் - விரும்பிச் செய்வர்.