பளபளக்கும் மஞ்சள் பொழிலில் ஓவியமாய் உன்பிம்பம்

இளவேனில் தென்றல் இதமாக வந்துமேனி தழுவ
இளஞ்சூரியன் கதிரும் அன்பினில் வந்து தழுவ
பளபளக்கும் மஞ்சள் பொழிலில் ஓவியமாய் உன்பிம்பம்
தளதள மேனியலையில் கலைகையில் மனதில் வருத்தம்

இளவேனில் தென்றல் இதமாய் தழுவ
இளஞ்சூரி யன்கதிரும் அன்பில் தழுவ
பளபளக்கும் மஞ்சள் பொழிலில்உன் பிம்பம்
தளதளவென் றேமின் னுது

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jan-23, 4:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே