பருவத்தின் நெஞ்சம் பார்வையில் கொஞ்சும்

பட்டியருகே நானும்
எட்டி நின்றாலும் /
பருவத்தின் நெஞ்சம்
பார்வையில் கொஞ்சும்/

பருக்கள் படர்தை
அந்த வதனம்/
பூக்களை வென்ற
வட்ட முகம்/

பளிங்கி சிலையாக
நின்ற உருவம்/
பட்டாடை உடுத்திய
மங்கைத் துருவம் /

பழமை நடிகை
பானுமதியின் நளினம்/
தினமும் பழகிப் பார்த்திட
அழைக்கின்றது மனம்/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (17-Jan-23, 2:13 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 53

மேலே