அடியேய் ஆடி மாசக் காத்தே

மனசுக்குள்ள மத்தாப்பு
வாடியம்மா கந்தகப்பூ/
ஊசிப் பார்வையை
வீசிக்காதே தப்பு/

பொங்கும் அருவியாக
அங்கம் நனைச்சுக்கிறாய்/
மங்கிடும் மாலைப்பொழுதிலே
பங்கம் விளைவிக்கிறாய் /

பனித்துளி பட்ட
அல்லி முகமே/
கனியிதழ் கோதிக்கும்
கிளியாக மாத்திக்கிறாய்/

இறுக்கி புடிச்சுக்காதே
உடையோடு சேத்து/
அடியேய் ஆடிமாசக்
காத்தே விலகிக்கோடி /

வெடவெடத்துப் போகிறது
சப்த நாடியடி/
தேடிக்கவா நானும்
கம்பளிப் போர்வையடி/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (17-Jan-23, 2:05 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 51

மேலே