செம்பட்டுப் பூவே

கையோடு கை
கோர்த்திட வேணாமா/
மூச்சோடு மூச்சு
மோதிக்க வேணாம் /

வெளுப்பு மேனி
குளத்தில் இறங்கிக்கலாமோ /
கழுத்து வரையிலும்
கெண்டைமீனும் ஊர்ந்துக்கலாமோ/

மண் தொட்டு
வளர்ந்த கொடியினிலே/
மலர்ந்த செம்பட்டு
சின்னப் பூவே/

நுகர்தலிலே மூச்சும்
இனிக்குதடி மானே /
நோக்கையிலே கண்ணும்
பட்டுக்குமடி பெண்ணே/

செவ்விதழால் சொல்லிக்கடி
வார்த்தை ஒண்ணு /
எந்நாளும் தொட்டுப்
பறிச்சுக்கலாமோடி நானும் /

எழுதியவர் : ஆர் எஸ் கலா (17-Jan-23, 2:01 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 57

மேலே