நாணமோ இன்னும் நாணமோ

கன்னக்குழியோ ஒற்றைப்புளி
கன்னங்களோ கிண்ணம்கனி /
மோதும் தென்றலாய்த்
தாவினேன் கொஞ்சம்/

நாணும் கதிராக
கோணுகிறாய் நின்று /
சுண்டு விரல் பட்டதுமே
தொட்டாச்சிணிங்கியாகிறாய் /

நிலத்திலே நிலை
குத்தியதோ விழியிரண்டும்/
ஏறேடுத்தும் பார்க்கவில்லை
தேரிலிருந்தும் இறங்கவில்லை /

வெட்கத்தால் தர்க்கம்
செய்யாதேடி என்னிடம் /
நோக்கிய என் காதலை
தயக்கங்கள் தாக்குதடி /

முறையோடு நானும்
நெருங்கையிலே/
முகம் மறைக்கலாமோ ரதியே /
நாணமோ இன்னும் நாணமோ /

எழுதியவர் : ஆர் எஸ் கலா (17-Jan-23, 1:55 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 180

மேலே