பதினாறு வயசுப் பொண்ணு
கன்னம் அது வண்ணு
மாதிரி /
கண்ணோ ம்ம்ம் மின்னல்
தோரணம் /
பற்களோ ஆகா முல்லை
வண்ணம்/
கூந்தலோ மார்கழி மழை
மேகம் /
இடியும் வெடியுமாய்த் தெறிக்கும்
மொழிகள் /
இடையில் இருக்கும் வளைவுச்
சாலைகள் /
குடையோ கையில் நடையோ
ஆமை வேகத்தில் /
வருவாள் எந்நாளும் தலுக்கி
மினுக்கி உய்யாரி /
பருவம் தின்னும் பதினாறு
வயசுப்பொண்ணு/
முறைப்பான பார்வையிலே /
கல்லும் புல்லும் வீசி விடும் கண்ணு /