கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே

ஊமை மொழிகளை
உரைத்து முடிக்கின்றது/
கருமையிட்ட
உமது இரு விழிகள்/

மேலும் கீழுமாய்
உருட்டி மிரட்டி /
ஓசையின்றி என்னை
வீழ்த்தியது அவைகள்/

புன்னகை சிந்திடும்
உன்னிதழ்களிலேஇன்னும்/
இன்சொல் ஒன்று
உதிரலையே எதனாலே/

சொற்களைக் கொண்டு
திணித்திடு காதினிலே/
வாழ்க்கை பூராவும்
மகிழ்ந்திருப்பேன்அதனாலே/

வார்த்தைகளை மென்றும்
விழுங்கியும்என்னாலும் /
கண்ணாலே
பேசிப் பேசி கொல்லாதே/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (17-Jan-23, 1:41 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 181

மேலே