பொங்கல் வாழ்த்து
அங்கமெல்லாம் காயம்பட்டு கழனிகளில் போராடி
தன் பசியை மறந்து பிறர் பசியைப் போக்க,
திங்கள் தோறும் கனவுகளே இல்லாது குறியீடுகளைச்
சுமந்து, கடன்பட்டு உடன்பட்டு
எங்களுக்காகப் போராடும் வார்க்கங்களே, உங்கள் உணர்வு
உணர்ச்சி இவைகளை மதிக்கும் நிலைதனில்,
பொங்கலுக்குச் சொல்லவா?, உங்களுக்கும் மாடாய்
உழைக்கும் யாவருக்கும் "வாழ்த்துக்கள்" என.
ஆனைக்குளம், சங். சொர்ணவேலு, கணக்காளர், கோவை.