அவள் கண்களின் அழகு
முதல் முதலாய் எனைப் பார்த்து
அவள் புன்னகைத்தாள் அதில் புதைந்த
அர்த்தங்கள் ஆயிரம் ஆயிரம் எனநினைத்தேன்
அவள் கண்களை நோக்க அது
அசைந்து அசைந்து பேசியதே அதில்
இந்த கண்களின் அழகிற்கு இணை
ஏதேனும் நீக்கண்டதுண்டோ என்று
சொல்வது போல இருந்தது அதனால்
நேத்ர திலகம் நீ என்றேன்
அதைக் கேட்டு அவள் மகிழ்ந்திடவே