எமது நெஞ்சம் நிறைந்த பாரதி

எமது நெஞ்சம் நிறைந்த பாரதி

பார்பனீய
ஆதிக்கத்தை
அழித்திட,
பார்பனீய சோலையிலேயே
உதித்திட்ட சூரியனே!!

எட்டையபுரத்தில் உதித்து,
எட்டாத உயரத்தில் நின்றிட்ட சந்திரனே!!!

உன்னைப்போல்
மிடுக்கு நடைப்போட்டு
வந்தோருமில்லை.......
பாலிய குழந்தைகளின்
மனம் முழுவதும் நிறைந்து
நின்றொருமில்லை!!...

அடுப்பூதும்
பெண்களுக்கு
படிப்பு எதற்கு?
என்ற
வினவளுக்கான
விடையாக...........
பெண்களை
பல்துறைகளை வென்றிடும்
ரதிகளாக்கியதனாலேயே
நீ பாரதி்யானாய்!!

யாரும்
இங்கு யாருக்கும்
அடிமையில்லை
என்ற புரிதலை உணர்த்தி,
அடிமை விளங்கை
உடைத்தெரிந்த............
உம்மை யார்?
அந்த பாரதி என
சனாதன சக்திகளின்
தேடலாளேயே
நீ பாரதியாரானாய்!!

பிஞ்சு
வயதினில் கணக்கை
நஞ்சு என்று ஒதுக்கினாய்!!...
தமது
பாடல் வரிகளால்
காலனி ஆதிக்கத்தை
தீயிட்டு போசுக்கினாய்!!...

உணர்ச்சிமிகு
பாடல் வரிகளை
கேட்போரின்
செவிகளுக்கு
விருந்தாக்கினாய்!!
பாதிக்கப்பட்டோரின்
உயிர்துடிப்பிற்கான
மருந்தாக்கினாய்!!

இன்னல்களை
உடைத்தெறிந்ததனால்
இதிகாசமானாய்!!
வரலாற்றை
புரட்டி போட்டதனால்
அனைவரும் போற்றும்
வரலாறானாய்!!

உம்மை
இழந்து
நூற்றாண்டை
எட்டினாலும்.........

பாடல்களால்
உமது புகழ்
உதித்ததனால்
பாடலாகவே
அனைவரின் உள்ளத்திலும்
வாழ்கிறாய்!!

எழுத்துக்களால்
அனைவரின்
நெஞ்சத்திலும்
நீங்காமல்
நிலைத்திருப்பதனாலேயே
எழுத்தாகவே
நிற்கிறாய்!!

வாழிய பாரதி!!
தமிழ்மண் வாழும் வரை
வாழட்டும் பாரதி!!...

நி.வ.விஸ்வதுளசி,

22/01/2023

எழுதியவர் : இரா.வசந்தகுமார் (22-Jan-23, 11:20 pm)
சேர்த்தது : விஸ்வமோனீஷ்
பார்வை : 326

மேலே