பசுமை

காதோடு காது வைத்து ,
கிசு கிசுத்த நாட்கள்...
கானா தூரத்தில் இருந்தாலும்,
கண்ணோடு கண் பேசிய நாட்கள்...
தனிமையில் இருந்த போதும்,
என் உயிர் தீண்டும் உன் ஸ்பரிசம்...
வறுமையில் வாடிய போதும்,
பசுமையாய் இருந்தது வாழ்க்கை...
பணத்தில் பசுமையாகிய பின் - ஏனொ
எனக்குத் தோன்றுகிறது - வெறுமையும்
உள்ளூர ஒரு வறுமையும்... !

- இராஜசேகரன்

எழுதியவர் : Rajasekaran (11-Oct-11, 1:56 pm)
பார்வை : 261

மேலே