134 கணவனல்லாத பிற ஆண் காணக் கண்ணிலாள் மனைவி - கணவன் மனைவியர் இயல்பு 26

தரவு கொச்சகக் கலிப்பா

பூணலங்கன் மார்பினாரை யன்றிவேறு புருடனைக்
காணநோக்கி லேனினைந்து கழறநெஞ்சு வாயிலேன்
பாணவேறு பொறியிலேனை நடனம்பார்க்க வாவெனா
நாணமின்றி யேயுரைத்த நண்பர்வம்ப ரேகொலாம். 26

- கணவன் மனைவியர் இயல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”பாணனே! ஆபரணங்கள் அணிந்த மார்பினையுடைய கணவனையன்றி வேறு ஆண்களைக் காண எண்ணமாட்டேன்; பிறரை நினைக்கவும், பேசவும் நெஞ்சமும், வாயும் எனக்கில்லை. கணவனையன்றி வேறு எண்ணம் இல்லாத என்னை நடனம் காண வா என்று நாணமில்லாது அழைக்கும் தலைவர் வம்பரே ஆவார்” எனப் பெண்களின் ஒழுக்க நிலைப்பாடை இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

பூணலங்கன் - ஆபரணங்கள் அணிந்தவன், கழற – பேச, பொறி – எண்ணம், மனம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-23, 6:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

மேலே