போக்காளன்
பூட்டிய கடையின் வாசலில்
உறங்க முயற்சிக்கிறான் எம்போகி
கொசுவோடு சேர்ந்து
கடிக்கிறது மழை
தலைக்கும் காலுக்குமாய் இழுபடுகிறது அழுக்குச் சாரம்.
தூக்கம் வரும் நேரத்தில் எழுப்புகிறான் கடைக்காரன்.
பூட்டிய கடையின் வாசலில்
உறங்க முயற்சிக்கிறான் எம்போகி
கொசுவோடு சேர்ந்து
கடிக்கிறது மழை
தலைக்கும் காலுக்குமாய் இழுபடுகிறது அழுக்குச் சாரம்.
தூக்கம் வரும் நேரத்தில் எழுப்புகிறான் கடைக்காரன்.