உன் மலர்க்கைகளால் என்னை தழுவ வா

பூமிக்கொரு வாசம் உண்டு!
பெண்ணுக்கொரு பாசம் உண்டு!
உன்ன நானும் நெனச்சேனே!
என் கண்ணுக்குள்ள உன்ன நானும் வெதச்சேனே!
வந்தவரை வாழவைக்கும் பூமித்தாயி போல
நானும் என் நெஞ்சுக்குழிக்குள்ள உன்ன புதைச்சேனே!

திக்கு முக்கு தெரியாம நான் நின்னாலும்
எட்டுத் திக்கும் போயிதா நீ வந்தீயே!
என் புருஷன் வெரசாத்தா வந்தாலும்
நம் கைகள் ரெண்டும் மாறி மாறி நம்ம கன்னம் பொத்தி மலராத்தான் விரிச்சாலும்
நம் கண்களெல்லாம் வண்டாகி சண்ட போட்டிடுமே!

எழுதியவர் : சு.சிவசங்கரி (30-Jan-23, 10:25 pm)
சேர்த்தது : சுசிவசங்கரி
பார்வை : 109

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே