222 கொலைஞனை விருப்பாய்க் கூடுவான் எமன் – கொலை 9

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

தீயிடை மூழ்கினோன் சிங்கி யுண்டவன்
மாய்விலா துய்யினும் வதனுய் யானமன்
ஆயதன் றொழில்புரி வோனை யன்பொடு
மேயதன் னுலகினுக் கீண்ட ழைக்குமே. 9

– கொலை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”தீக்குளித்தவனும் நஞ்சுண்டவனும் இறந்து போகாமல் பிழைத்தாலும், கொலைஞன் ஒருநாளும் எமனுக்குத் தப்பி உயிர் வாழ மாட்டான். தன் தொழிலாகிய சாவினைச் செய்யும் கொலைஞனை எமன் மிகவும் அன்புடன் தன்னுலகுக்கு விரும்பி அழைத்துக் கொள்வான்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

சிங்கி - நஞ்சு. வதன் - கொலைஞன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jan-23, 3:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே