258 மேல்கீழ் கருதி பெறும் பொருளும் கைக்கூலியே – கைக்கூலி 14
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா காய் காய் மா அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
நேயர் பற்ச’ர்’தீனர் நிதியோரெ னச்சொல்
பேத மதையேநி னைத்தநிதி புரிதன்
மாய முற்றபேர் கள்சொலையே மதித்தி
டாத பக்கவாத முற்றுநீதி தவிர்தல்
தீய வத்தமா தியோடுலோ கரத்ந
ராசி பலதேய முற்றுமார்பொ ருளெலாம்
தேய முற்றியே லலவைகா தலித்த
லாதி பரிதான மொத்ததீது களரோ. 14
– கைக்கூலி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நண்பர், பகைவர், ஏழை, செல்வர் எனச் சொல்லப்படுகின்ற வேறுபாட்டை நினைத்து முறை தவறுவது, பொய்யர் சொல்லை மெய்யென மதித்து ஒருதலைப் பட்சமாகச் சார்ந்து நீதி தவறி நடப்பது, தீயவழியில் பெற்ற செல்வத்தினால் மணி முதலிய ஒளிக் கற்கள் ஆகிய பல பண்டம் அனைத்தும் பெற ஆசைப்படுவது முதலியவை கைக்கூலி பெறுவதற்கு இணையான தீமையே ஆகும்” என இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
பற்சர் - பகைவர். தீனர் - ஏழைகள். நிதியோர் - செல்வர். அத்தம் - செல்வம். ரத்நம் - ஒளிக்கல். காதலித்தல் - ஆசைப்படுதல்.