291 வறுமை, பாவம், துன்பம் சோம்பலால் பெருகும் - சோம்பல் 4
வஞ்சி விருத்தம்
(காய் விளம் காய்)
மடிசேரு மவர்க்கொரு நாளுமறல்
விடியாத வர்நெ'ஞ்'சிடை வெந்துயரே
குடியாகு மறந்தொடர் குற்றமெலா
நெடிதாக வளர்ந்திடு நிச்சயமே. 4
- சோம்பல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
சோம்பலை உடையவர்க்கு ஒருநாளும் வறுமைப் பிணி நீங்காது. அவர் மனத்தில் கடுந்துன்பம் குடி கொள்ளும். பாவம் சேரும் தீமைகளெல்லாம் பெருமளவு வளர்வது உறுதி” என்கிறார் இப்பாடலாசிரியர்.
மடி - சோம்பல். மறல் - வறுமை. மறம் - பாவம்.