290 குடும்பம் பேணுவோர் சோம்பலை கொள்ளார் – சோம்பல் 3

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

தெளிவுற நூல்பல தினமும் வாசித்து
மிளிருடல் வருந்தியும் வெறுக்கை யீட்டிநற்
கிளிமொழி மனைவியைக் கிளைஞ ரைப்பல
எளியரைத் தாங்குவோர்க்(கு) இல்லை மந்தமே. 3

- சோம்பல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மெய்ந்நூல்களை தினமும் தெளிவுடன் வாசித்து, ஆரோக்கியமாக விளங்கும் உடல் வருந்த உழைத்துப் பணம் சம்பாதித்து, இனிய கிளி மொழி பேசும் மனைவியை, உறவினர்களை, பல எளியவர்களைப் பேணி வருபவர்க்குச் சோம்பல் என்பதே கிடையாது” என்கிறார் இப்பாடலாசிரியர்.
.
வெறுக்கை - பணம். மந்தம் - சோம்பல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jan-23, 7:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே