வறுமை ஒழியட்டும்

வறுமை ஒழியட்டும்!!!!

வறுமையில் உழல்வோர்தம்
வாழ்வு மலரட்டும்!
பசியின் கொடுமையெலாம்
அவரிடத்தில் அகலட்டும்!

ஏழ்மையின் துயரெல்லாம்
பனியாய் விலகட்டும்!
இவர் துயரறிந்துதவுவார்
செல்வம் பெருகட்டும்!

மனிதரில் ஏற்றத்தாழ்வு
காண்பார் வீழட்டும்!
தீண்டாமை போற்றுவாரெங்கும்
அழிந்தே ஒழியட்டும்!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (3-Feb-23, 11:11 am)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 375

மேலே