பெண்ணை அடைந்ததிலிருந்து..!!
பெண்மையை அடையும்போது
மாதம் ஒருமுறை
உறைந்த உதிரும்
உடைந்து ஓடுகிறது..!!
வலியும் வேதனையும்
அவளுக்கென கொடுத்தானோ
கல்நெஞ்சக்காரன் இப்படி
கண்ணெதிரே துடிக்கிறாள்..!!
அவளிடம் வலியை
வாங்கிக்கொள்ளவும் முடியாமல்
பார்த்துக் கொண்டும்
இருக்க முடியவில்லை..!!
தத்தளிக்கிறேன் கடல்மீது படகாய்
இறைவா கருணை
பெண்ணிடம் ஏன் காணாமல் போனது..!!