371 மழைப்பயிர் வளம்போல் மன்னும் நற்புகழ் – தற்புகழ் 4

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

நீரினால் பயிர்வளம் நிலைத்தல் போற்குணச்
சீரினால் புகழ்ப்பயிர் செழிக்க வேண்டும்நற்
பேரிலான் தற்புகழ் பிடித்தி ழுத்தரு
மாரியில் பயிரினை வளர்த்தல் மானுமே. 4

– தற்புகழ்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”மழை நீரால் பயிர்வளம் நிலைப்பது போல, குணச் சிறப்பால் ஒருவரது புகழாகிய பயிர் செழிக்க வேண்டும்.

நன்மை செய்து நற்பெயர் பெறாதவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது, தானே நீண்டு வளர வேண்டிய பயிரைக் கையால் பிடித்து இழுத்து மழையில்லாமல் பயிரை வளர்க்க முயற்சிப்பதற்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

தற்புகழ் - தன்னைத் தானே புகழ்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Feb-23, 2:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே