உலகப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
உலக புற்றுநோய் தினமான இன்று புற்றுநோயைப் பற்றி ஓரளவு அறிந்து கொள்வோம். நாமெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இந்தக் கொடிய நோய் தாக்கத்திற்கு உள்ளாகாமல் இருக்கிறோம். புற்றுநோய் என்பது ஒற்றை சொல்லில் அடங்கும் நோய் அல்ல அது உடல் முழுக்க எல்லா உறுப்பிலும் பரவும் ஒரு அபாயகரமான நோய். அது எத்தனை வகைகள் உள்ளன என்பது தெரிந்தாலே நீங்கள் மலைத்துப் போவீர்கள்.
புற்று நோய்களின் பெயர் பட்டியல்
மூளைப் புற்று
மூளைக்கட்டி புற்று
உதடு புற்று
வாய் புற்று
நாக்கு புற்று
டான்சில் புற்று
கண் புற்று
மூக்கு புற்று
குரல்வளை புற்று
தைராய்டு புற்று
கழுத்து புற்று
தண்டுவட புற்று
மார்பக புற்று
அக்குள் புற்று
நுரையீரல் புற்று
உணவுக்குழாய் புற்று
இரைப்பை புற்று
ஈரல் புற்று
கணைய புற்று
சிறுகுடல் புற்று
மலக்குடல் புற்று
எருவிடும் வாய்ப்புற்று
விதை புற்று
புராஸ்டேட் புற்று
ஆண்குறி புற்று
சிறுநீர்ப்பை புற்று
சிறுநீரகப் புற்று
இரத்தப் புற்று
குழந்தைகளுக்கு வரும் ரத்த புற்று
நிணநீர் கோளாறு புற்று
எலும்பு மஜ்ஜை புற்று
கருப்பை புற்று
கருப்பை வாய் புற்று
ஓவேரியன் புற்று
சேலை புற்று
தொடை புற்று
தோல் புற்று
என நான் அறிந்தது 37 வகையான புற்று நோய்கள். இன்னும் சில இருக்கலாம். இவைகளை மேலோட்டமாக மட்டுமே நான் உட்பட அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறோம் (சில நிபுணர்களை தவிர்த்து).
ஆனால் புற்றுநோயின் தாக்குதல்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள பல புத்தகங்கள் இணையதள செய்திகள் மருத்துவர் நேர்காணல் விழிப்புணர்வு காணொளிகள் நம் வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் புற்றுநோயாளிகள் என பல விதங்களில் நமக்கு ஏற்படும் புரிதலே புற்றுநோயின் தீவிர தாக்கத்தையும் அது பற்றிய விழிப்புணர்வையும் நமக்கு ஏற்படுத்தும்.
உங்களுக்கு என்றாவது ஒரு நாள் வாய்ப்பு கிடைத்தால் சென்னை அடையாறில் அமைந்துள்ள புற்றுநோய் மருத்துவ மனையை (𝘼𝘿𝙔𝘼𝙍 𝘾𝘼𝙉𝘾𝙀𝙍 𝙄𝙉𝙎𝙏𝙄𝙏𝙐𝙏𝙀) சென்று பாருங்கள். அங்குள்ள புற்றுநோயாளிகள் படும் அவதிகளை காணும் போது இப்படி வாழ்வதற்கு இறந்து போய் விடலாம் என தோன்றும். உணவு நீர் என எல்லாமே டியூப் மூலமாகவே கொடுப்பார்கள். அதைவிட வேதனை அங்கு அடிக்கடி எடுக்கப்படும் பரிசோதனைகள் ஊசி மருந்துகள் கீமோதெரபி இவையெல்லாம் மிகவும் கொடுமையாக இருக்கும்.
நோயாளிக்கான ஆதரவாளர்கள் எப்பொழுதுமே அவரது உடனே இருப்பதும் இல்லை. மரணம் வரை தொடர்ச்சியான ஒரே இயல்பு வாழ்க்கை நரகத்திலும் கொடுமை அவர்களுக்கு. என்னை கேட்டால் அவர்களை கருணை கொலை செய்து விடலாம் என்று கூறுவேன்.
நான் இரண்டு முறை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்று உள்ளேன். பணம் உள்ளவர்கள் ஒருவேளை புற்றுநோயை வென்று வெளியே வரலாம். அதுவும் ஆரம்ப நிலை கண்டுபிடிப்பாக இருந்தால் மட்டும்.
எடுத்துக்காட்டாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் ஏற்பட்ட போது டாக்டர் லாரன்ஸ் எய்ன் ஹாம் (𝗗𝗿.𝗟𝗮𝘄𝗿𝗲𝗻𝗰𝗲 𝗘𝗶𝗻 𝗛𝗼𝗿𝗺) கீமோதெரபியில் பயன்படுத்திய மருந்து பிளாட்டினத்தை அடிப்படையாகக் கொண்ட சிஸ்பிளாஸ்டின் (𝗖𝗶𝘀𝗽𝗹𝗮𝘀𝘁𝗶𝗻). தீவிர சிகிச்சை மற்றும் அதிக பொருட்செலவு மூலம் அவரை மருத்துவர்கள் புற்றுநோயிலிருந்து மீட்டு எடுத்தார்கள்.
புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உலோகங்கள் பிளாட்டினம் வெள்ளி தங்கம் செம்பு போன்ற விலை மதிக்கத்தக்க பொருட்களாக இருப்பதால் பெரும்பாலானோர் சிகிச்சை ஆரம்பித்து விட்டு பொருட்செலவு அதிகமாக ஆகும் நிலையில் நிறுத்தி விடுகிறார்கள்.
நமது மக்கள் பொதுவாக அறிந்து வைத்திருப்பது சிகரெட் குடித்தால் புகையிலை போட்டால் மட்டுமே புற்றுநோய் வரும் என்பதே. ஆனால் பலவிதமான புற்று நோய்கள் அதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன. அதை ஒரு பதிவாகவோ அல்லது கட்டுரையாகவோ மட்டும் கூறி விளக்கி விட முடியாது.
புற்று நோய் என்றால் என்ன?
அது எப்படி வருகிறது?
வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
என்ன வகையான புற்றுநோய்?
என்ன உணவு பழக்கங்களை கையாள வேண்டும்?
என ஏராளமான தகவல்கள் உள்ளன.
புற்றுநோய் விழிப்புணர்வு நாளான இன்று உங்களால் முடிந்தவரை புற்றுநோயை பற்றி புத்தகம் படித்தும் இணையதளம் பார்த்தும் தெரிந்தவர்களிடம் கேட்டும் ஓரளவு அறிந்து கொள்ளுங்கள். புற்று நோயின் தாக்கத்தை பற்றி ஓரளவு தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
நன்றி
🙏