328 செல்வம் அகன்றபின் செருக்கினர் நிலையென்னாகும் - செல்வச் செருக்கு 7
வஞ்சி விருத்தம்
(விளம் விளம் காய்)
செழித்திடு நாளினிற் செருக்குற்றாய்;
கழித்துணை மாநிதி கைநீங்கிற்
பழித்திடு முலகி(ன்)முன் பரிவின்றி
விழித்திடல் எப்படி வினைநெஞ்சே. 7
- செல்வச் செருக்கு, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”தீவினை நெஞ்சே! பெரும்பொருளுடன் வளமாக இருக்கும் பொழுது நல்லது செய்யாமல் தற்பெருமை கொண்டாய்.
அதனால் அப்பெரும் பொருள் உன் கையை விட்டு நீங்கும் பொழுது பழித்துச் சொல்லும் உலகத்தவர் முன் ஆதரவின்றிப் பரிதாபமாகத் தோன்றுவது எப்படி என்று சிந்தித்துப் பார்” என்று அறிவுறுத்துகிறார் இப்பாடலாசிரியர்.
மாநிதி - பெரும்பொருள். செழிப்பு - வளம். பரிவு - ஆதரவு. வினை - தீவினை.