மார்க்கோ போலோ கண்ட பாண்டிய நாட்டில் சுவாரசியமான ஒரு சில பகுதிகள்

மார்க்கோ போலோ கண்ட பாண்டிய நாட்டில் சுவாரசியமான ஒரு சில பகுதிகள்.

எடுத்துக்கொண்ட நூல் “ “தமிழர் நாகரிகமும் பண்பாடும்” - டாக்டர் அ.தட்சிணாமூர்த்தி, பிறந்த ஆண்டு 10.4.1938.

பதிப்பகம் “யாழ் வெளியீடு”, AP.1108, தென்றல் குடியிருப்பு, மேற்கு அண்ணா நகர், சென்னை-40

கி.ப் 13ம் நூற்றாண்டை சேர்ந்த வெனிசுலா நாட்டு பயணி மார்க்கோ போலோ தான் கண்ட பாண்டிய நாட்டின் நிலையினை குறித்து வைத்துள்ளதில் ஒரு சில.

வெளிநாட்டவர்கள் தமிழ்நாட்டை “மாபார்” என்று குறித்தனர்.

காயல்பட்டிணம் சிறந்த துறைமுகமாக இருக்கிறது. இப் பட்டிணம் பாண்டியனுக்கு உரியதாக இருக்கிறது. பெரும்பாலும் நடு நிலையோடு இருக்கிறான், வெளி நாட்டு வணிகர்களுக்கு நிறைய வசதிகள் செய்து தந்திருக்கிறான்.

ஹார்மோஸ், கிஸ், ஏடன், அரேபியா போன்ற மேற்கு நாடுகளில் இருந்து வரும் கப்பல்கள் இந்த துறைமுகத்தை தாண்டியே செல்கிறது. இக்கப்பலில், குதிரைகளும் பிற பொருட்களும் ஏற்றி வரப்படுகின்றன. அதனால் இந்த நகரில் ஏராளமான கூட்டம் கூடுகிறது. மிகப்பெரிய வாணிகம் (சந்தை) நடக்கிறது.

இந்த நாட்டில் குதிரைகள் உற்பத்தியாகவில்லை, இதனால் பெரும் பகுதி செல்வம் குதிரை வாங்குவதில் வீணாக செலவிடப்படுகிறது. ஒவ்வொரு குதிரயும் 500 சாகி பொன்னை கொடுத்து வாங்குகிறார்கள். ஆண்டு தோறும் மிகப் பெரிய எண்ணிக்கையில் குதிரைகளை வாங்குகிறார்கள்.
வாச:.ப் என்பவர் இது பற்றி கூறுவது, ‘மாலிக்-ஐ-இசுலாம் ஜமாலுடீன்’ என்னும் வணிகன் பாண்டியர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆண்டுக்கு 1400 உயர் வகை குதிரைகளை “கைஸ்” என்னுமிடத்திலிருந்து மாபாருக்கு கொணரவேண்டும்.

மிக பழமையானவையும் புகழ் மிக்கனவானதும் ஆகிய ருக்ஸ்,ருஸ்டம், முதலியவற்றை இக்குதிரைகளுடன் ஒப்பிடும்போது செஸ் பலகையில் உள்ள குதிரைகளை போல பயனற்றவை என்று கருதுமாறு அவற்றின் தரம் இருக்கவேண்டுமாம்.

பெர்சியாவை சேர்ந்த சதீப், லஷா, பஹரின், ஹூர்முஸ்,குல்ஹது முதலிய இடங்களிலிருந்து எவ்வளவு குதிரைகளை கொணரமுடியுமோ அவ்வளவு குதிரைகளை கொணருமாறும் கூறினர்.

ஒவ்வொரு குதிரையயின் விலை 220 தினர் (440 சாகி செம்பொன்) என்று முடிவு செய்யப்பட்டதாம். மேலும் பயணத்தின் போது குதிரைக்கு ஏதேனும் ஆகி விட்டால் அரசு கருவூலம்தான் பொறுப்பு என்கிற ஒப்பந்தமும் போடப்பட்டது.

குதிரைகள் வீணானது ஏன்? என்று மார்க்கோ போலோ குறிப்பிடுகிறார். குதிரைகட்கு பச்சை பார்லியை கொடாது, வறுத்த பார்லியையும், வெண்ணை கலந்த தானியங்களையும், காய்ச்சிய பாலையும் கொடுத்தது கண்டு வியப்புறுகின்றார்.

நாற்பது நாட்கள் கயிற்றில் கட்டி வைத்திருந்து , தக்க பயிற்சியளிக்காது, சேனமும் எதுவுமின்றி வீரர்கள் பேய்களை போல ஏறி சவாரி செய்தனர்.. இதனால் மிக விரைவாக ஓடக் கூடிய சுறு சுறுப்பு மிக்க வலிய குதிரை கூட, மெலிந்து பலவீனப்பட்டு வேகமற்ற பயனற்ற குதிரைகளாக மாறிவிட்டன. இதனால் ஆண்டு தோறும் புதிய குதிரைகள் வாங்க வேண்டியிருக்கிறது.
வாச:.ப் குறிப்பிடுகையில் இந்த நாட்டில் குதிரைகளை உற்பத்தி செய்ய முடியாது என்பது அனுபவத்தில் கண்டது, என்றாலும் குதிரையை எங்கனம் கையாளவது என்று மக்கட்கு ஒன்றுமே தெரியவில்லை.
குதிரைக்கு லாடம் அடிப்பதை பற்றி அவர்கள் இவர்களுக்கு சொல்லி தரவுமில்லை, அந்த நாட்டிலிருந்து லாடம் அடிப்பவர்களை இங்கு வருவதில் இருந்து தடுக்கவும் செய்தனர்.

முத்து குளித்தல்

புகழ் பெற்று விளங்குகிறது. ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் நடுப்பகுதி வரையில் முத்து குளிப்பு நடை பெறுகிறது. சிறியதும் பெரியதுமான கப்பல்களில் முத்து குளிப்போர் சென்றனர். முதலில் அவர்கள் “பெட்டலர்” என்னும் இடத்துக்கு சென்று அங்கிருந்து வளைகுடாவிற்குள்
“60 கல் தொலைவு” வரை சென்றனர். கப்பல்களை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி விட்டு சிறு படகுகளில் ஏறிக் கொண்டனர்.

வணிகர்கள் பல குழுக்களாக முத்து குளியலுக்கு பணியாளர்களை கொண்டு சென்றனர்.

அவர்கள் குளிக்கும் முத்துக்களில் பத்தில் ஒரு பங்கை மன்னனிடம் ஒப்படைக்க வேண்டும். பெரிய மீன்கள் முத்து குளிப்போருக்கு ஊறு செய்யாமல் இருக்க சிலர் உதவியாக இருப்பார்கள் அவர்களுக்கு 1/12 பகுதியை அளித்தல் வேண்டும்.இவர்கள் அப்பிரான் என்றழை -க்கப்பட்டனர் (பிராமணர்கள்). அவர்கள் மந்திரம் ஒரு நாளுக்கு மட்டுமே உரியது. இரவில் மந்திரகட்டை அவிழ்த்து விடுவர். மீன்கள் தம் விருப்பம் போல் உலாவும்.

முத்து குளிப்போர் கடலுக்குள் நான்கிலிருந்து பனிரெண்டு ஆள் ஆழத்துக்கு சென்று தம்மால் முடிந்த நேரம் இருப்பர். முத்து சிப்பிகளை பொறுக்கி தம் இடுப்பை சுற்றி ஒரு வலையலிட்டு மேலே வருவர். பின் மீண்டும் மூழ்குவர். இங்கனம் பெருமளவு முத்துக்களை பெற்றனர். உலகம் முழுவதும் இவர்களது முத்து கொண்டு செல்லப்பட்டன. இதனால் அரசனும் பெரும் பொருள் பெற்றான்.

அரை சாகியோவுக்கு மேல் எடையுள்ள ஒரு முத்தை கூட யாரும் வெளிப்படையாக நாட்டுக்கு வெளியே கொண்டு செல்ல முடியாது. ஏனெனெனில் இத்தகைய பெரு முத்துக்கள் மன்னனுக்கு உரியவை. இதனால் அவரிடம் நிறைய முத்துக்கள் இருந்தன. அப்படி யாராவது ஒருவரிடம் இத்தகைய முத்துக்கள் இருந்தாலும் மன்னன் அவைகளை பெருமளவு பொருள் கொடுத்து பெற்றான்.

மற்ற செய்திகள் வாசப்:. கூறுவது

குலசேகர பாண்டியன் கருவூலத்தில் 1200 கோடி பொன் இருந்ததாகவும் முத்தும் கற்களும் சொல்லால் விவரிக்க இயலாத அளவுக்கு இருந்தது.
500 மனைவிமார்கள், நிறைய மக்கட்மார் இருந்தனர்.
மதுவருந்தாமையை எந்தளவுக்கு கடைபிடிக்கிறார்களோ அந்தளவுக்கு குற்றவாளிகளை தண்டிப்பதிலும் கடுமையாக உள்ளனர். குடிகாரர்களும், கடற்பயணிகளும் சமீன்தாராக இருக்கமுடியாது என்னும் விதி செய்துள்ளார்கள்.
மாபார் முழுவதும் சட்டை தைப்பதற்கு ஒரு தையற்காரன் கூட இல்லை. ஒவ்வொருவரும் வெற்றுடம்புடன் இருக்கின்றனர். நாகரிகத்திற்காக ஒரு சிறு துணியை சுற்றியிருந்தனர். ஆண், பெண், செல்வர், வறியர், எல்லாருமே இப்படியாகத்தான் இருந்தனர். மன்னர் உட்பட.
வீரர்கள் போதிய உடையின்றியே ஒரு வேலும் கேடயமும் மட்டும் கொண்டு போருக்கு சென்றனர்.
ஆடவரும் பெண்டிரும் இருமுறை குளித்தனர். குளிக்காதவர்களை இழிவாக கருதினர். வலது கையால் உண்டனர். தனித்தனி பாத்திரத்தில் நீர் பருகினர். அண்ணாந்து உதட்டில் படாதவறு பருகினர். அயலவருக்கு தன் பாத்திரத்தில் நீர் ஊற்றுவதில்லை. அவர்களிடம் பாத்திரம் இல்லையென்றால் கையில் ஊற்றி குடிக்க செய்தனர்.
கடவுளுக்கு மாமிசத்தையும், பிற உணவுகளையும் கோயில் தொண்டுக்காக விடப்பட்ட பெண்கள் சமைத்து படைத்தனர். கடவுள் அவற்றை உண்ணும் நேரம் வரையிலும் ஆடலும் பாடலும் நிகழ்த்தினர். கடவுளின் ஆவி அவ்வுணவை உண்டுவிட்டதாக நம்பி அதன் அவற்றை புசித்தனர்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Feb-23, 2:44 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 27

மேலே