504 தாய்க்கிழவிப் பேய்தடுத்தாள் தன் மகளும் ஆங்கிலளே – கணிகையரியல்பு 31

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

சிலர்மயில்வீ டுற்றனரென் றறிந்துண்மை யறியவங்குச்
..செல்லுங் காலை
புலனிழந்து நூறாண்டுங் கடந்தகூனு டன்மாமி
..பூபா மாரன்
மலர்வாளி விடுத்தனன்சே ரெனையென்ன நெருங்கிவழி
..மறித்தா ளப்பேய்
கலவிதனக் கஞ்சியுமீண் டோடினேன வள்சுதையைக்
..கண்டி லேனே. 31

– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

சிலர் மயில்போலும் சாயலையுடைய பொதுமகள் வீட்டுக்குச் சென்றனரென்று கேள்விப்பட்டு, உண்மை யறிய அங்கு விரைந்து சென்றேன்.

பொறிபுலன் நன்றாய்த் தொழிற்பட முடியாது ஆற்றலற்று ஆண்டு நூறுங் கடந்து உடல் கூனி `தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றி நடந்துவரும் தாய்க் கிழவியாகிய மாமி என்னை வழிமறித்து, `அரசே! என்மேல் காமன் பூங்கணை பொழிந்தனன். நீர் என்னைச் சேர்தல் வேண்டும் என்றாள்.

அப்பேயுடன் கூட அஞ்சி மீண்டு ஓடினேன். வீட்டில் அவள் மகளைக் கண்டிலேன்.

கலவி - கூட்டம். சுதை - மகள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-23, 3:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே