505 பொருளீவோர் ஈயார்மேல் கீழ்ச்சாதி பொதுமகட்கு – கணிகையரியல்பு 32

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

கைத்தனநா மிழந்தபின்கூன் முடவரந்த கர்நோயர்
..கடைக்கு லத்தர்
நித்தமரு விடவுள்ள முவந்தமின்னை நோக்கியிது
..நெறியோ வென்றேம்
அத்தமதிற் குருடூனஞ் சாதியிழி வுளதோவஃ
..தளிப்போர் மேலோர்
இத்தரையி லெனக்கீயார் கீழ்க்குலத்தர் சாதியிவை
..யிரண்டென் றாளே. 32

– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

கைப்பொருள் முற்றும் அற்றபின், பொதுமகளாம் மின் போலும் தையலை நோக்கிப், `பெண்ணே! கூனர் முடவர் குருடர் நோயர் இழிகுலத்தோர் முதலியவர்களை நாளும் உள்ளம் உவந்து கூடுதல் முறையோ என்றேன்.

`அவர் பொருளில் குருடு உறுப்புக்குறை இனத்தாழ்வு முதலிய குற்றம் உளதோ? இல்லையன்றே. அப்பொருள் அளிப்பார் யாராயினும் அவர் மேலோரே. இவ்வுலகில் எனக்குப் பொருள் ஈயார் கீழோரேயாவர். இவ்விரண்டே இனம் என்றாள்.

கைத்தனம் - கைப்பொருள். அந்தகர் - குருடர். இனம் - சாதி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-23, 3:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே