224 யார்க்கும் கொலைசெய்யும் உரிமை இல்லை – கொலை 11

கலிவிருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு)

அகந்தனை யுடையவ னழித்தல் நீதியெண்
இகந்தபல் லுயிரெலா மியற்றி னோற்கன்றிச்
சகந்தனி லவைகளைத் தம்மைக் கொன்றிட
உகந்தபே ருரிமையீங் கொருவர்க் கில்லையால். 11

– கொலை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”வீட்டை உடைய ஒருவன் அவனது வீட்டை அழிப்பது முறை எனலாம். அதுபோல, அளவில்லாத பல உயிர்களையும் படைத்துக் காக்கின்ற கடவுளுக்கு அல்லாமல் இந்த உலகத்தில் வேறு ஒருவர்க்கும் அவ்வுயிர்களையேனும், தம்மையேனும் கொல்வதற்கு ஏதுவான பெரிய உரிமை இங்கே வேறு ஒருவர்க்கும் இல்லை” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

அகம் - வீடு. அழித்தல் - துடைத்தல். நீதி - முறைமை. சகம் - உலகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-23, 3:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே