ஆதியும் அந்தமும் மாறாதது

நான் தற்சமயம் மரியாதைக்குரிய கோயம்பத்தூர் புறநகரில் மனைவியுடன் வசித்துவருகிறேன். நான் இதற்குமுன்பு ஹைதராபாத் நகரில் பலவருடங்கள் வேலைகாரணமாக வசித்துவந்தேன்.

ஹைதராபாத்தில் இருந்தபோது என்னுடைய காரின் பதிவு எண்: TS 09 GK 1537 . இங்கு கோவை நகர் வந்தபிறகு வண்டியின் பதிவு எண்ணை தமிழ்நாடு பதிவின் கீழ் பதிவு செய்தேன். பல மாதங்கள் அலைந்தபிறகு, தேவையான பணத்தை அரசாங்கத்திற்கும் மற்றவர்க்கும் கொடுத்தபின் இறுதியில் எண் வண்டியின் பதிவு எண் தமிழ்நாடு RTO கீழ் பதிவு செய்யப்பட்டு வண்டி எண் TN 66 BS 3267 என்று மாற்றப்பட்டுவிட்டது.

இப்போது கவனியுங்கள். நான் ஹைதராபாத்தில் இருந்தபோது வண்டி பதிவு எண்ணின் ஆரம்ப எழுத்து T . இப்போது மாற்றப்பட்ட பதிவு எண்ணின் முதல் எழுதும் T . பழைய பதிவு எண்ணின் கடைசி எண் 7 . மாற்றப்பட்ட புதிய வண்டி பதிவு எண்ணின் கடைசி எண்ணும் 7. இங்கும் சரி ஹைதராபாதிலும் நான் என் காரின் பதிவு எண்ணை தேர்ந்தெடுக்கவில்லை. தானாகவே அமைந்த பதிவு எண்கள்தான்.

இதிலிருந்து நான் கண்டுகொண்ட உண்மை "ஆதியும் அந்தமும் எப்போதும் என்றும் மாறாதது , ஒன்றுதான். என்னைப் பொறுத்தவரை ஆதி T அந்தம் 7 ".

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (13-Feb-23, 8:32 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 61

மேலே