கேள்வி பதில் நேரம்

கேள்வி: பாரதியார் மேலைநாட்டில் பிறந்திருந்தால் என்னவாகி இருப்பார்?
பதில்: பாதிரியார்
&&&
கேள்வி: கோவலன் இப்போது இருந்திருந்தால் எங்கு அதிகம் சுற்றிக்கொண்டிருப்பான்?
பதில்: கோவணத்துடன் கோவளத்தில்
&&&
கேள்வி: பட்டினத்தார் இப்போது இருந்தால் எந்த ஊரில் இருப்பார்?
பதில்: கோவில்பட்டி
&&&
கேள்வி: கண்ணதாசன் இந்த காலத்தில் இருந்தால் என்ன பாட்டு எழுதியிருப்பார்?
பதில்: வாட்ஸாப் வரை உறவு, இன்ஸ்டாகிராம் வரை மனைவி, டிவீட்டர் வரை பிள்ளை, ஜீமெயிலுக்கு யாரோ?
&&&
கேள்வி: நாகேஷும் சோவும் இன்று இணைந்தால் எந்த படத்தில் நடிப்பார்கள்?
பதில்: சர்வர் பின் துக்ளக்
&&&
கேள்வி: நடிகர் முத்துராமன் இன்று இருந்திருந்தால் என்ன பாத்திரத்தில் நடித்திருப்பார்?
பதில்: ராஜனிகாந்துக்கு அண்ணனாக.
&&&
கேள்வி: எம்ஜியாரும் சிவாஜியும் இருந்து இன்று இணைந்து நடித்தால் அந்த படத்தின் பெயர் என்னவாக இருக்கும்?
பதில்: வியட்நாம் வீட்டில் ராமசந்திரன்
&&&
கேள்வி: மகாத்மா காந்தி இப்போது தமிழ்நாட்டில் இருந்திருந்தால் என்னவாக இருந்திருப்பார்?
பதில்: ஒவ்வொரு சட்டமன்றத்தேர்தலிலும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு ஒவ்வொரு முறையும் டெபாசிட் இழந்து, வாழ்க்கை வெறுத்துப்போய் கொல்லி மலையில் ஆஸ்ரமம் அமைத்துக்கொண்டு அறத்துப்பாலுடன் வறுக்கப்படாத வேர்க்கடலையை மட்டும் சாப்பிட்டு, யார் கண்ணுக்கும் தெரியாமல் சித்தர் போல வாழ்ந்துகொண்டிருப்பார்.
&&&
கேள்வி: கே பாலசந்தர் இன்று இருந்திருந்தால் அவர் எடுக்கும் அடுத்த திரைப்படத்தின் பெயர் என்னவாக இருக்கும்?
பதில்: மாடிவீட்டு மோடி

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Feb-23, 11:14 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 35

மேலே