கேள்வி பதில் நேரம் 1

கேள்வி: புத்தருக்கும் சித்தருக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: புத்தர் ஒளிந்துகொள்ளாமல் சராசரியான வாழ்க்கையை வாழ மறந்தார். சித்தர் கொல்லி மலையில் ஒளிந்துகொண்டு சராசரி வாழ்க்கையை மறுத்தார்.
&&&
கேள்வி: மாமியார் மருமகள் சண்டை இல்லாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?
பதில்: இருவருமே திருமணம் செய்துகொள்ளக்கூடாது.
&&&
கேள்வி: பலப் பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பது எப்படி?
பதில்: பணத்திடமிருந்து தப்பி ஓடவேண்டும்
&&&
கேள்வி: ஒருவரை ஒருவன் முட்டாள் என்றால் அதை எவ்வளவு பேர் ஆமோதிப்பார்கள்?
பதில்: எட்டாள்
&&&
கேள்வி: இமயமலை மேலே குடும்பத்துடன் எவ்வளவு நாட்கள் தங்கமுடியும்?
பதில்: அங்கே லாட்ஜில எவ்வளவு நாள் ரூம் போட்டிருக்கோ அவ்வளவு நாள்
&&&
கேள்வி: நாம் வாழ்கின்ற வாழ்க்கையில் எதாவது அர்த்தம் இருக்கிறதா?
பதில்: பின்னே எதுக்கு இந்தமாதிரி அர்த்தமில்லாத கேள்வியை கேட்கிறாய்?
&&&
கேள்வி: இது திருச்சிக்கு போற ரயில்வண்டி. உங்ககிட்ட இருக்கிறது திருச்சிக்கு பஸ் பேருந்தில் போக டிக்கெட்.
பதில்: என் பேரன் சொன்னான் "பாட்டி நீங்க பயணசீட்டு வாங்கினா பஸ்ல போனாலும் ரயிலில் போனாலும் திருச்சிக்கு போகலாம்"
&&&
கேள்வி: நீ வாழ்க்கையில் செய்த உருப்படியான காரியம் என்ன?
பதில்: இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருப்பது
&&&
கேள்வி: ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்ன?
பதில்: ஆண் நேராக பெண்ணை பார்ப்பான். பெண் ஓரக்கண்ணால் ஆணை பார்ப்பாள்.
&&&
கேள்வி: ஏன் நீ "நான் இனி கல்யாணமே செய்துகொள்ளமாட்டேன்" என்கிறாய்?
பதில்: எனக்கு ஏற்கெனவே ஒரு கல்யாணம் ஆகிவிட்டது

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Feb-23, 3:31 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 45

சிறந்த நகைச்சுவைகள்

மேலே