கந்தன் வசந்தன்

மருதமலை கந்தன் குளியல் அபிஷேகம் செய்து நெற்றியில் விபூதி அலங்காரம் செய்து கொண்டான். அவன் நாவு பஞ்சாமிர்தம் சுவைத்தது. பின்னர் சூடான வெண் பொங்கலையும் சுவைத்தது.
ஆனாலும் கந்தன் மனம் திருப்தி அடையவில்லை. ஏன்?
அவன் வழக்கமாக காலையில் தேநீர் அருந்தும் ' கந்தன் டீ ஸ்டால்' மூடியிருந்தது.
&&&
பால்காரன் பாலசாமி மாட்டிடமிருந்து மூன்று லிட்டர் பாலைக் கறந்தான். அதில் நன்கு நுரை பொங்கியது. இன்னும் அரை மணி நேரத்தில் அவன் ஐந்து லிட்டர் பாலை அவன் வாடிக்கையாளர்களுக்குத் தர வேண்டும். ஆனால் பாலோ ஐந்து லிட்டர் தான் உள்ளது. என்ன செய்வான்? அவன் தினமும் செய்வது இது தான். பசு மாடு அவனுக்கு முதல் தெய்வம் என்றால் அவன் வீட்டுக் குழாய்த் தண்ணீர் அவனுக்கு இரண்டாவது தெய்வம். அதிலிருந்து தண்ணீர் சுத்திகரிப்பு கருவி மூலம் நீரை சுத்தப்படுத்தி அதிலிருந்து இரண்டு லிட்டரை நுரையான மூன்று லிட்டர் பாலில் கலந்து பாலை ஐந்து லிட்டராக்கி அவன் வாடிக்கையாளர்களுக்குத் விற்பனை செய்கிறான்.
வாடிக்கையாளர்கள் அவன் பாலைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?
" கறந்த பாலில் ஒரு துளி நீர் கூட கலக்காமல் கள்ளி சொட்டு போலத் தருகிறான்"
&&&
நேர்மை நடராஜன் லஞ்சம் என்ற சொல்லை கேட்டாலே பத்து மீட்டர் தூரம் சென்று விடுவார். எனவே அவரின் தயவால் பல முக்கிய அரசாங்க வேலைகளை முடித்துக் கொள்ளும் சிலர் அவருக்கு லஞ்சம் கொடுப்பதிலை. அவரவர் வேலை முடிந்தவுடன் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவர் வீட்டிற்கு சென்று ஒரு தாம்பாளத்தில் பழம் பூ வைத்து அதனுடன் ஒரு சிறிய உறையில் சிலபல வண்ணம் தாங்கிய ஐநூறு ஆயிரம் என்று எண்ணிக்கை பொறித்த சில காகிதங்களை வைத்து அந்த உறை மேல் ' சிறிய அன்பளிப்பு' என்று எழுதிக் கொடுத்து விடுகிறார்கள். பாவம் நேர்மை நடராஜன் அன்புக்குப் பணிந்தவர். அன்பளிப்பை எப்படி நிராகரிக்க முடியும்?
&&&&
பீட்டர் ஒரே டாக்டர். அவர் மனைவியோ ஒரு ஆக்டர்.
வருண் நாயர் ஒரு லாயர். அவர் மனைவி மீனாட்சி மேயர்.
சங்கர் ஒரு சிங்கர். அவன் மனைவி வியாபாரம் லேடீஸ் பிங்கர்.
பாலன் வளர்ப்பது பச்சைக்கிளி. அவர் மனைவி ஆடுவது கதக்களி.
வசந்தன் வாங்குவது தவணையில். வசந்தி ஓதுகிறாள் தலையணையில்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Feb-23, 10:52 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 47

சிறந்த நகைச்சுவைகள்

மேலே