கேள்வி நாயகன் பதில் நாயகி

கேள்வி நாயகன்: உன் வீட்டில் உள்ள நாயின் பெயர் என்ன?
பதில் நாயகி: எந்த நாயை குறிப்பிடுகிறாய்?

கேள்வி நாயகன்: அரசியல் என்கிற சாக்கடையை நான் புனிதமாக்கமுடியுமா?
பதில் நாயகி: புனிதம் என்கிற கங்கையை ஏன் சாக்கடையாக ஆக்கப்பார்க்கிறாய்?

கேள்வி நாயகன்: நான் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க என்ன தகுதி வேண்டும் ?
பதில் நாயகி: நீ ஏற்கெனவே கதயநாகனாக நடித்திருக்கவேண்டும்.

கேள்வி நாயகன்: என் காதல் தோல்வி அடைந்துவிட்டது. இனி என்ன செய்கிறது?
பதில் நாயகி: வாழ்த்துக்கள், காதல் தோல்வியில் வெற்றிகண்டு விட்டாய். அடுத்த காதல் தோல்விக்கு அடிக்கல் நாட்டு.

கேள்வி நாயகன்: அமெரிக்கா வந்து இருபது வருடங்கள் நல்ல பணம் சம்பாதித்தேன் ஆனால் உண்மை மகிழ்ச்சிக்குத்தான் பஞ்சம் . இந்தியாவில் பார்த்து கல்யாணம் செய்த பெண் என்னைவிட்டுவிட்டு இந்தியாவிற்கு சென்றுவிட்டாள். நான் என்ன செய்வது?
பதில் நாயகி: மீண்டும் இந்தியாவிற்கு வந்து சம்பாதித்த பணத்தை பாங்கில் போட்டு, வரும் வட்டியில் நீயும் வாழ்ந்து தர்ம காரியங்களுக்கும் செலவிடு. உனக்கு பிடித்ததையெல்லாம் செய்து வாழ்ந்திடு. மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.

கேள்வி நாயகன்: நான் உயிரோடு இருப்பதால் யாருக்கு என்ன லாபம்?
பதில் நாயகி: நீ உயிரோடு இருப்பதால் உனக்கு என்ன நஷ்டம்?

கேள்வி நாயகன்: அண்ணன் தம்பி அக்கா தங்கை இவர்கள் பேருக்குத்தானே தவிர ஒண்ணும் பெரிய அன்பு பாசம் எதுவும் இல்லை?என்ன செய்ய?
பதில் நாயகி: அன்பு பாசம் அவர்களிடம் இல்லையென்பதால் நீ அவர்களுக்கு உன்னால் முடிந்த அன்பையும் பாசத்தையும் கொடுத்துவிடு. கொடுப்பதில் நீ கவனமாக இரு எடுப்பதில் அல்ல.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (26-Feb-23, 7:36 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 25

சிறந்த நகைச்சுவைகள்

மேலே