ஆளுக்கு ஒரு தினம் காதலர்கள் தினம்
"உன்னைத் தொட்ட நாள்முதல், நான் மூர்ச்சையாகினேன் !
உன்னைப் பார்த்த நாள்முதல், என் மூச்சை சேகரிக்கிறேன் !
குளிர்காற்றினில் கடல் அலைகள் சிறகுகளின்றிப் பறந்தோடுமே !
உன் மூச்சுக் காற்றினில் என் உதட்டலைகள் முத்தம் கேட்குதே !
என் கண்ணோடு தைத்த உன் முகத்தால் நான் முகமூடியாகினேன் !
என் நெஞ்சோடு தைத்த உன் மனதால் நான் இரத்தம் சிந்தினேன் !"