என் தோழிக்கு மணநாள் வாழ்த்து
நட்பு பிடிக்கும் என்றேன் நீ என்னை பிடிக்கும்
என்றாய் நட்பாய் உன் பாசம் பிடிக்கும் என்றேன்
என் நட்பின் சுவாசம் நீ என்றாய்
எனக்கு நேசிக்க தெரிந்த பூவெல்லாம்
நட்பு மட்டும்தான் என்று நான் சிரிக்க
நேசிக்க மட்டும் தெரியும் எனக்கு
நட்பை சுவாசிக்கவும் தெரியும் என நிரூபித்தாய்
இன்னும் சில நாளில் மண நாள் காண போகின்றாய்
வாழ்த்து சொல்லிடவா
உன்னை வார்த்தையால்; அள்ளிடவா
உன்னிடம் பிடித்ததெல்லாம் உனக்கே
தெரியும் அதலால் உனக்கு தெரியாமல்
உன்னிடம் இருக்கும் ஒன்றை சொல்லிட
துணிந்து விட்டேன் உனக்கு மட்டும் மறைத்து வைத்தேன்
சொல்லும் காலம் வந்ததால் இப்போது சொல்லுகின்றேன்
உந்தன் பாசத்தில் வெறும் பாசம் மட்டுமல்ல
தாய்மையை உணர்ந்தவன் நான்
எனக்கும் கேட்கின்றேன் உன் நட்பு மட்டுமல்ல
உன் தாய்மையை வேண்டி நின்றேன்
உன் மடியில் தவழ்ந்திட எனக்கும் வாய்ப்பு கொடு
ஒரு நொடி என்னை சேயாய் மாற்றிவிடு