காத்து கிடக்கிறேன்..!!
தேன்நிலவு ஒளியோ
தேக்கு மர நிழலோ..!!
தேவதை உன் முகமோ
தெரியாதே என் மனமோ..!!
இருளை கண்டும்
இதயம் ஒலிக்கிறதே..!!
இரண்டொரு நாழிகையும்
இதமாய் துடிக்கிறதே..!!
இம்சைகளும் இனிக்கிறதே
இன்பங்களும் பூக்கிறதே..!!
காணாத நாளெல்லாம் கசக்கிறதே
கட்டிக்கொள் என மனம் தவிக்கிறதே..!!
கண்ணிரண்டிலும் விழுந்தவளே
காரணமின்றி நுழைந்தவளே..!!
காத்து கிடக்குறேனடி
உன் கரம் பிடிக்க..!!