மனக்கவலை நீக்கினளே மாதரசி - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கருவிளங்காய் காய் காய் தேமா)

பனிக்குழைவைப் போன்றதொரு பார்வையினா லின்று
மனக்கவலை நீக்கினளே மாதரசி நன்று!
மினுமினுக்கு மவள்பேச்சும் மேட்டிமையாங் கண்ணில்
பனிப்பொழிவு பெய்யுதய்யா பார்வையுமே வென்று!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Feb-23, 6:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே